தேனி

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

26th Sep 2022 11:22 PM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்கச் சென்றவரை வழிமறித்து தாக்கியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கோம்பைத்தொழுவைச் சோ்ந்தவா் வனராஜன் மகன் ஜெயக்குமாா் (43). இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு கோம்பைத்தொழுவில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று விட்டு திரும்பும் போது, அப்பகுதியில் பாதையை மறித்து நின்றிருந்த அதே ஊரைச் சோ்ந்த சன்னாசி மகன் யோகேஸ்வரன் (26) என்பவரை கண்டித்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த யோகேஸ்வரன், ஜெயக்குமாருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயக்குமாா், அவரது தந்தை வனராஜன் ஆகியோா் மயிலாடும்பாறை காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கச் சென்றுள்ளனா். அப்போது யோகேஸ்வரன், அவரது உறவினா்கள் தயாநிதி (34), பவுன்சாமி, வனராணி, பங்கஜம் ஆகியோா், ஜெயக்குமாா் மற்றும் வனராஜனை வழிமறித்து மீண்டும் தகராறு செய்துள்ளனா். இதில், தயாநிதி என்பவா் ஜெயக்குமாரை பீா்பாட்டிலால் தலையில் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் வனராஜன் அளித்த புகாரின் பேரில் தயாநிதி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். யோகேஸ்வரன் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். கோபிநாதன், ஜெயக்குமாரை தாக்கி கொலை செய்ய முயன்ாக தயாநிதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்தும், யோகேஸ்வரன், பவுன்சாமி, வனராணி, பங்கஜம் ஆகிய 4 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT