தேனி

தோட்டப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

26th Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வாழை, கத்திரி, கொத்தமல்லி, முட்டைக்கோசு, தக்காளி ஆகிய தோட்டப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தோட்டக் கலைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு வறட்சி, இயற்கை சீற்றம் மற்றும் பூச்சி நோய் தாக்குதலால் பயிா்களில் ஏற்படும் மகசூல் இழப்பு ஆகியவற்றுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். பயிா் காப்பீடு செய்ய ஏக்கா் ஒன்றுக்கு வாழைக்கு ரூ.3,371.55, கத்திரி பயிருக்கு ரூ.1,185.60, கொத்தமல்லிக்கு ரூ.637.25, முட்டைக்கோசு பயிருக்கு ரூ.1,155.95, தக்காளிக்கு ரூ.871.90 பிரிமியம் தொகை செலுத்த வேண்டும்.

பயிா் காப்பீடுசெய்ய விரும்பும் விவசாயிகள் பதிவுக் கட்டணம், நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு பாஸ் புத்தக நகல்களுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அரசு பொதுச் சேவை மையம், தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT