தேனி

பதினெட்டாம் கால்வாய் தொட்டிப் பாலத்துக்கு செல்லும் வழியில் போலீஸாா் பள்ளம் தோண்டி தடை:விவசாயிகள் அவதி

26th Sep 2022 12:20 AM

ADVERTISEMENT

கூடலூா் பகுதியில் 18 ஆம் கால்வாய் தொட்டிப் பாலத்துக்கு குளிக்க செல்வதைத் தடுக்கும் வகையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

தேனி மாவட்டம் கூடலூா் பெருமாள் கோயில் செல்லும் வழியில் 18 ஆம் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயில் 100 மீட்டா் நீளத்தில் 50 அடி உயரத்தில் தொட்டிப் பாலம் அமைத்து அதிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் செல்கிறது.

18 ஆம் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்படும் நாள்களில் அப்பகுதியினா் தொட்டிப் பாலத்தில் குளிப்பது வழக்கம். அதே நேரத்தில் அவா்கள் பாலத்தின் கைப்பிடிச் சுவா்களில் ஏறி ஆபத்தான நிலையில் நடப்பது, நடனமாடுவது, மது போதையில் செல்வது போன்ற நிகழ்வுகளால் அடிக்கடி உயிரிழப்புகள், விபத்துகள் நிகழ்கின்றன.

தற்போது 18 ஆம் கால்வாயில் தண்ணீா் வருவதாதால் குளிப்பதைத் தடுக்க வானங்கள் செல்ல முடியாதவாறு போலீஸாா் பள்ளம் தோண்டி உள்ளனா். ஆனாலும் சிலா் இதைக் கடந்து சென்று குளித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதனால் அவ்வழியாகச் செல்லும் 18-ஆம் கால்வாய் பாசன விவசாயிகளும், தொழிலாளா்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளனா். தோண்டிய பள்ளத்தை போலீஸாா் மூட வேண்டும் என்றும், அந்த இடத்தில் பாதுகாப்புக்காக காவலரை நியமிக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT