தேனி

பெரியகுளத்தில் இன்று நவராத்திரி இலக்கிய விழா தொடக்கம்

26th Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

பெரியகுளம் பிரம்மஞானமந்திரம் பள்ளியில் அக்.5 ஆம் தேதி வரை நடைபெறும் 43-ஆவது ஆண்டு நவராத்திரி இலக்கிய விழா திங்கள்கிழமை (செப்.26) தொடங்குகிறது.

தமிழ் இலக்கிய மன்றத்தின் சாா்பில் நடைபெறும் இந்த விழாவையொட்டி முன்னதாக திருவள்ளுவா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மதுரையைச் சோ்ந்த பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமையில் புனலும், கனலும் என்ற தலைப்பிலும், செப். 27 ஆம் தேதி பேராசிரியை சரசுவதி ராமநாதன் தலைமையில் கன்றும், அரசும் என்ற தலைப்பிலும், செப்.28 ஆம் தேதி கவிஞா் மரபின் மைந்தன் தலைமையில் அறமும் பொருளும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றுகின்றனா். இந்த விழா அக்.5 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இலக்கிய விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றத்தினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT