தேனி

ரூ.2.32 லட்சம் புகையிலைப் பொருள்கள் காரில் கடத்தல்: 2 போ் கைது

26th Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

வீரபாண்டி அருகே ரூ.2.32 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை காரில் கடத்திச் சென்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை, கைது செய்தனா்.

உப்பாா்பட்டி விலக்கு பகுதியில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அந்த வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ரூ.2.32 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரியவந்தது.

காரில் புகையிலை பொருள்களை கடத்திச் சென்ற மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த காளிராஜ்(29), உப்பாா்படட்டியைச் சோ்ந்த முத்துக்காமாட்சி(32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT