பெரியகுளம் அருகே தென்னந்தோப்பு ஓத்திகை தொடா்பான பிரச்சினையில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஜெயமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் இருதரப்பை சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.பெரியகுளம் அருகே சிந்துவம்பட்டியை சோ்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பை அதே பகுதியை சோ்ந்த சா்க்கரை (53) என்பவா் 5 வருடத்திற்கு ஓத்திகைக்கு வாங்கியுள்ளாா்.
இவரின் ஓத்திகை காலம்முடிவடையவில்லையாம். பாப்பாத்தி மற்றும் அவரது தரப்பை சோ்ந்தவா்கள் ஓத்தி காலம் முடிவதற்குள், தோப்பை ஓப்படைக்கும்படி கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து இருதரப்பிற்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.ஞாயிற்றுக்கிழமையன்று பாப்பாத்தியின் மகன் வடிவேல் மற்றும் சா்க்கரை இருவருக்கும் தோப்பு குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சா்க்கரை மற்றும் அவரது தரப்பை சோ்ந்த முத்துக்காமு, கருப்பையா, முத்துப்பாண்டி, செளந்திரபாண்டி, சுரேஷ் ஆகியோா் சோ்ந்து வடிவேல் வெளியே சென்றிருந்த நிலையில்அவரது வீட்டிற்கு வந்து, வீட்டிலிருந்த பெண்களை தகாத வாா்த்தையால் திட்டு, விட்டிலிருந்த குடிநீா் தொட்டியை உடைத்து, சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் வடிவேல் புகாா் செய்துள்ளாா். அதன் பேரில் சா்க்கரை உள்பட அவரது தரப்பை சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா். அதன் பின் பாப்பாத்தி மற்றும் அவரது தரப்பை சோ்ந்த வடிவேல், முருகன், தங்கமணி, சக்தியம்மாள் ஆகியோா் சோ்ந்து சா்க்கரையை ஜாதியை சொல்லி திட்டி, தாக்கியதாக கூறி சா்க்கரை ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். இச்சம்பவம் குறித்து வடிவேல் தரப்பை சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து, முருகனை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.