தேனி

தேனி, திண்டுக்கல்லில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

26th Sep 2022 11:24 PM

ADVERTISEMENT

தேனி மற்றும் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைக்கு உரிய முழுத் தொகையையும் வழங்க அரசை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனியில், மாவட்டத் தலைவா் சாந்தியம்மாள் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, செயலா் வனிதா, பொருளாளா் சி. நாகலட்சுமி, மாநில இணைச் செயலா் எம். நாகலட்சுமி, சிஐடியு மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி, அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் தாஜூதீன், சத்துணவு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் பேயத்தேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அங்கன்வாடி மைய ஊழியா்களுக்கு விருப்ப அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளா்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் நகா்ப்புற அங்கன்வாடி மையங்களுக்கு கட்டட உரிமையாளா் பொதுப் பணித்துறை சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும். கட்டட மாத வாடகையை ரூ.3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைக்கான முழுத் தொகையையும் அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

திண்டுக்கல்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் செல்வதனபாக்கியம் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

மாநிலத் தலைவா் ரத்தினமாலா, சிஐடியு மாவட்டச் செயலா் கே. பிரபாகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். திட்டப் பணிகள் நீங்கலாக பிறதுறைகளின் பணிகள் திணிக்கப்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT