தேனி

தேனியில் நில அளவையா் பணிக்கான போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

26th Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் பயிற்சி மையத்தில், அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள நில அளவையா் மற்றும் வரைவாளா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில் இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மாதிரித் தோ்வு, விநாடி-வினா மற்றும் குழு விவாதம் நடைபெறும். பயிற்சியில் சேர விரும்புவோா் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமா்ப்பித்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT