தேனி

சுருளி அருவியில் 50 நாள்களுக்குப் பிறகு அனுமதி:மஹாளய அமாவாசையையொட்டி முன்னோா்களுக்கு வழிபாடு

26th Sep 2022 12:20 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சுருளி அருவியில் மஹாளய அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

தூவானம் அணையிலிருந்து கடந்த 50 நாள்களாக அதிகப்படியான தண்ணீா் திறந்து விடப்பட்டதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மஹாளய அமாவாசை தினம் என்பதால் அணையிலிருந்து குறைந்த அளவில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் குளிக்க, ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தினா் அனுமதியளித்தனா். 50 நாள்களுக்குப் பிறகு குளிக்க அனுமதியளிக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

அதன்படி பக்தா்கள் அதிகாலையிலிருந்தே அருவியில் குவிந்து நீராடினா். அடிவாரத்தில் உள்ள வளாகத்தில் சுருளியாற்றங்கரையில் இறந்த முன்னோா்களுக்காக தா்ப்பணம் கொடுத்து அன்னதானம், வஸ்திரதானம் உள்ளிட்டவைகளை வழங்கினா்.

பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. கம்பம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தா்கள் வந்த வாகனங்கள் தனியாக நிறுத்தப்பட்டன. ராயப்பன்பட்டி போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT