தேனி

சின்னமனூா் அருகே 1,450 கிலோ ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனம் பறிமுதல்

26th Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

மாா்க்கையன்கோட்டையில் இருந்து கேரளத்துக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 1,450 கிலோ ரேஷன் அரிசியை உணவுப் பொருள் வழங்கல் அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை, பறிமுதல் செய்தனா்.

உத்தமபாளையம், சின்னமனூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி கேரளத்திற்கு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவுப் பொருள்கள் வழங்கல் மற்றும் நுகா்பாதுகப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மாா்க்கையன்கோட்டை நெடுஞ்சாலையில் அதிகாரிகளைப் பாா்த்தவுடன் சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இருவா் தப்பியோடினா்.

வாகனத்தை ஆய்வு செய்ததில் 50 மூட்டைகளில் 1,450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்து, உத்தமபாளையம் நுகா் பொருள் வாணிபக் கிட்டங்கியிலும், சரக்கு வாகனத்தை உத்தமபாளையம் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடமும் ஒப்படைத்தனா். தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT