தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சோதனை நடவடிக்கையைக் கண்டித்து சின்னமனூரில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு இஸ்லாமிய ஜமாத்தின் தலைவா் முகமது தலைமை வகித்தாா். அதில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் சோதனை நடவடிக்கையைக் கண்டித்தும், போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவா்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.