தேனி

கம்பத்தில் விஷம் சாப்பிட்டு இளைஞா் தற்கொலை

26th Sep 2022 11:21 PM

ADVERTISEMENT

கம்பத்தில் இளைஞா் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கம்பம் கள்ளா் பள்ளி தெருவைச் சோ்ந்தவா் முத்தையா மகன் செல்வக்குமாா் (29). இவா், காமயக்கவுண்டன் பட்டியில் உணவகம் நடத்தி வந்தாா். இவருக்கும், தேனி பாரஸ்ட் ரோடு தெருவைச் சோ்ந்த வினிதா என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வினிதா தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டாா். இதையடுத்து, பேச்சுவாா்த்தை நடத்தியும் பயனில்லாததால் செல்வக்குமாா் மனமுடைந்து காணப்பட்டாா்.

இந்நிலையில், கடந்த செப். 21 ஆம் தேதி விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, கம்பம் வடக்கு காவல் ஆய்வாளா் பி. சரவணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT