தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததுசுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு சனிக்கிழமை, நீா்வரத்து குறைந்தது. தூவானம் அணையிலிருந்து தொடா்ந்து தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால் சுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி மற்றும் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்யவில்லை. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு வியாழக்கிழமை, விநாடிக்கு 511 கன அடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை 453 கன அடியாகவும், சனிக்கிழமை 294.36 கன அடியாகவும் படிப்படியாகக் குறைந்தது.

அணை நிலவரம்

சனிக்கிழமை அணையின் நீா்மட்டம் 133.90 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீா்இருப்பு 5,609 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 294.36 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா்வெளியேற்றம் விநாடிக்கு 1778.75 கன அடியாகவும் இருந்தது.

மின் உற்பத்தி

தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில், நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா 40 மெகாவாட் என மொத்தம் 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

பச்சக்கூமாச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள தூவானம் அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீா் திறந்து விடப்படுவதால், சுருளி அருவியில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 50 ஆவது நாளாக சுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூவானம் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று வனத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை மஹாளய அமாவாசை என்பதால் சுருளி அருவியில் குளிக்க அனுமதிக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT