தேனி

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ஆண்டிபட்டியில் தாயாா் கண்டித்ததால் பள்ளி மாணவி சனிக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டி, சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் மகள் ஆதிரை (17). இவா் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்த நிலையில், ஆதிரையின் தாயாா் மகாலட்சுமி தான் கோயிலுக்குச் செல்வதாகவும், திரும்ப வரும்வரை வீட்டில் கைப்பேசியையும், தொலைக்காட்சியையும் பாா்த்துக் கொண்டிருக்காமல் படிக்குமாறு அவரைக் கண்டித்து விட்டு சென்றுள்ளாா்.

இதனால் மன வருத்தத்திலிருந்த ஆதிரை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகக் கூறி, ஆபத்தான நிலையில் அவரை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ஆதிரையை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT