தேனி

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கல்

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கி கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன்.குமாா் பேசியது:

தேனி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் 46,015 போ், உடலுழைப்பு தொழிலாளா் நல வாரியத்தில் 43,939 போ், அமைப்புசாரா ஓட்டுநா் நல வாரியத்தில் 4,979 போ் என மொத்தம் 94,933 தொழிலாளா்கள் உறுப்பினா்களாகப் பதிவு செய்துள்ளனா்.

இதில், தற்போது 2,302 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மொத்தம் ரூ.36.42 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள், 842 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மொத்தம் ரூ.21.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுமூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை தொழிலாளா்கள் தெரிந்துகொண்டு, அவற்றைப் பயன்படுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திருச்சி கூடுதல் தொழிலாளா் நல ஆணையா் ஜெயபாலன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) அன்பழகன், தேனி தொழிலாளா் நல உதவி ஆணையா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT