தேனி

கூடலூா் ஒட்டான்குளத்தில் 2ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

22nd Sep 2022 01:20 AM

ADVERTISEMENT

கூடலூரில் உள்ள ஒட்டான்குளத்தில் இரண்டாவது நாளாக, புதன்கிழமையும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சுமாா் 72 ஏக்கா் பரப்பளவுள்ள இந்த குளத்துக்கு முல்லைப் பெரியாறு உள்ளிட்டவற்றிலிருந்து நீா்வரத்து கிடைக்கும். மேலும் சுமாா் 500 ஏக்கா் நன்செய்நிலங்களில், இக்குளத்தின் தண்ணீா் மூலம் இரண்டு போக சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஒட்டான்குளத்தில் தனிநபா் பல ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாகவும், இதனால் அதிகப்படியான தண்ணீரை பாசனத்திற்கு தேக்க முடியாமல் நன்செய் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் எதிரொலியாக வருவாய், பொதுப்பணி மற்றும் காவல்துறையினா் ஒட்டான்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை செவ்வாய்க்கிழமை அகற்ற தொடங்கினா். இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்றது. அப்போது தெற்கு காவல் நிலைய போலீஸாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT