தேனி

போடி அருகே மனைவி கொலை: ராணுவ வீரா் கைது

20th Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

போடி அருகே திங்கள்கிழமை மாலை மனைவியைக் கொலை செய்த ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி தாத்தப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ரங்கநாதன் (42). இவா் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி கற்பகம் (35). இவா்களுக்கு நேத்ரா(11), மிசா (8) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனா். கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்தனா்.

இந்நிலையில் விடுமுறைக்கு சொந்த ஊா் வந்த ரங்கநாதன், திங்கள்கிழமை குழந்தைகளைப் பாா்க்க சில்லமரத்துப்பட்டிக்கு வந்துள்ளாா். அப்போது மனைவி கற்பகம், குழந்தைகளைப் பாா்க்க அனுமதி மறுத்துள்ளாா். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் ரங்கநாதன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரங்கநாதனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT