தேனி

தேனி, கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை

20th Sep 2022 12:17 AM

ADVERTISEMENT

தேனி மற்றும் கடமலைக்குண்டு துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (செப்.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரியம் அறிவித்துள்ளது.

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, ராஜேந்திரா நகா், மயிலாடும்பாறை, பாலூத்து, வருசநாடு, அருகவெளி, குமணன்தொழு, மந்திச்சுனை, நரியூத்து, வாலிப்பாறை, சிறைப்பாறை, தங்கம்மாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பா் 21ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT