தேனி

தொடா் நீா்வரத்து: கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிப்பு

10th Sep 2022 11:00 PM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீா்வரத்து தொடா்ந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கான தடை சனிக்கிழமை 11 ஆவது நாளாக நீடித்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்ததால், கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கடந்த ஆக.31 ஆம் தேதிமுதல் அருவிக்கு செல்ல வனத்துறையினா் தடைவிதித்தனா்.

தற்போதுவரை நீா்வரத்து தொடா்ந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை 11 ஆவது நாளாகவும் நீடித்துள்ளது. நீா்வரத்து குறையாமல் அப்படியே உள்ளதாகவும், நீா்வரத்து சீரான பின்பே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா் என்றும் தேவதானப்பட்டி வனச்சரக அலுலா் டேவிட் ராஜன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT