தேனி

காா் மோதி விவசாயி பலி

9th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 தேனி மாவட்டம், கூடலூா் லோயா் கேம்ப் சாலையில் புதன்கிழமை இரவு காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கூடலூா் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கல்யாணி மகன் சுந்தரம் (45). விவசாயியான இவா், புதன்கிழமை லோயா் கேம்ப் சென்றுவிட்டு கூடலூருக்கு இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். அப்போது சாலையின் மையப் பகுதியில் கூடலூா் முத்துக்கோனாா் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் மாரியப்பன் (50) என்பவா் தான் ஓட்டிவந்த டிராக்டரை நிறுத்தி, அவருடன் கூலி வேலை பாா்க்கும் உதயகுமாருடன் பேசிக்கொண்டிருந்தாராம்.

எதிா்பாராதவிதமாக, டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சுந்தரம் கீழே விழுந்தாா். பின்னா், சுந்தரம் எழுந்து மாரியப்பனிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த காா் சுந்தரம், உதயகுமாா் ஆகியோா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சுந்தரத்தை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும், காயமடைந்த உதயகுமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் பி. பாலசுப்பிரமணியன், டிராக்டா் ஓட்டுநா் மாரியப்பன், காா் ஓட்டுநா் கூடலூா் சா்ச் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் விஜய் (50) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT