தேனி

தமிழக-கேரள எல்லையில் இரு மாநில அதிகாரிகள் கூட்டாக சோதனை

7th Sep 2022 12:49 AM

ADVERTISEMENT

தமிழக- கேரள எல்லை பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு வனப்பகுதிகளில் உள்ள மலைச்சாலைகளில் இரு மாநில காவல், கலால் அதிகாரிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை வாகனங்களை சோதனை செய்தனா்.

இடுக்கி மாவட்ட கலால் துணை ஆணையா் வி.ஏ. சலீம், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ் ஆகியோா் உத்தரவுப்படி குமுளி, கம்பம்மெட்டு மலைச் சாலைகளில் கேரள- தமிழக அமலாக்கத்துறை அதிகாரிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

குமுளி காவல் நிலைய ஆய்வாளா் வி.ஏ. சுரேஷ், கலால் துறை ஆய்வாளா்கள் பி.கே.சதீஷ், பி.ஜி. ராஜேஷ், ஜாா்ஜ் ஜோசப், தமிழக மதுவிலக்கு உத்தமபாளையம் காவல் நிலைய சாா்பு -ஆய்வாளா்கள் எம். அழகுராஜா, ஆா். அன்பழகன் ஆகியோா் சோதனை செய்தனா்.

கம்பம் மெட்டு, குமுளி எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள், ரோஜா பூ கண்டம், பாண்டிக்குழி, 8ஆம் மைல், கம்பம் மெட்டு ஆகிய தமிழக -கேரள எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் சோதனை செய்தனா். ஓணம் பண்டிகை வரை எல்லைப் பகுதியில் சோதனை நடத்தப்படும் என இரு மாநில காவல், கலால் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT