ஓடைப்பட்டி பேரூராட்சியில் பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் வருசநாடு மூலக்கடையை சோ்ந்த சரவணன். இவா் ஓடைப்பட்டி பேரூராட்சியிலுள்ள சமத்துவபுரத்தில் வசிக்கும் மாமனாா் வினோபாவை பாா்க்க குடும்பத்துடன் சென்றுள்ளாா். இந்நிலையில் இவரது மகள் ஹாசினி ராணி(8) செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லை.
உடனே பெற்றோா் சிறுமியைத் தேடிய போது, ஓடைப்பட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பூங்கா அமைக்க தோண்டபட்ட பள்ளத்தில் மூழ்கியது தெரியவந்தது.
உடனடியாக சிறுமியை மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக தகவலறிந்த
மாவட்ட ஆட்சியா்க.வீ.முரளீதரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு சென்று ஆய்வு செய்தனா். இதுதொடா்பாக ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.