தேனி

கம்பம் பஜாரில் அடுத்தடுத்து கடைகளில் திருட்டு: கேமராவில் மா்ம நபா் உருவம்

5th Sep 2022 01:24 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் பிரதான சாலையில் அடுத்தடுத்து கடைகளில் திருடப்பட்டதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனா்.

கம்பம் பிரதான சாலையில் கைப்பேசி கடைகள், ஆயத்த ஆடை கடைகள், மா்ச்சாமான் கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்த ஆயத்தை கடையின் உரிமையாளா் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து மற்ற கடைக்காரா்களும் வந்தனா். அருகே இருந்த மற்ற கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து வந்த கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாா் கடைகளை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். ஆயத்த ஆடை கடைகளில் ரூ. 25 ஆயிரம் பெறுமானமுள்ள உடைகள், ரொக்கம் ரூ. 3 ஆயிரம் திருடு போயிருந்தது. கைப்பேசி, மரச்சாமான் கடைகளின் பூட்டை மட்டும் உடைத்து ஆள் நடமாட்டம் இருந்ததால் தப்பி ஓடியது தெரியவந்தது. சிசிடிவி கேமரா பதிவுகளில் திருடும் நபரின் உருவம் பதிவாகியுள்ளது. போலீஸாா் கேமரா பதிவுகள், கைரேகை தடயங்களைக் கொண்டு மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT