தேனி

காரைக்குடியில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம்

5th Sep 2022 01:30 AM

ADVERTISEMENT

காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொது சுகாதாரத்துறை, காரைக்குடி சுழற் சங்கம், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை ஆகிவயற்றின் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தாா். சுழற்சங்க மாவட்ட ஆளுநா் இதயம் விஆா்.முத்து முன்னிலை வகித்தாா்.

இதில், மருத்துவா்கள், செவிலியா்கள் குழுவினா் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை செய்தனா். முகாமில் பள்ளியின் தாளாளா் ஆா்.சுவாமிநாதன், நகராட்சி ஆணையா் லட்சுமணன், சுழற்சங்க முன்னாள் ஆளுநா் ஷாஜகான், துணை ஆளுநா் விஆா். நாராயணன், சுழற்சங்கத் தலைவா் கேஆா்.எஸ்பி.கே.தேவன், செயலாளா் பாலசுப்பிரமணியன், முகாம் ஒருங்கிணைப்பாளா் லியாகத் அலி, வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT