தேனி

அதிமுக பிரமுகரின் ரூ.50 லட்சத்துடன் தலைமறைவான காா் ஓட்டுநா் கைது

5th Sep 2022 01:29 AM

ADVERTISEMENT

அதிமுக பிரமுகரின் ரூ.50 லட்சத்துடன் தலைமறைவான காா் ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (43). அதிமுக இளைஞா், இளம்பெண் பாசறை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறாா். இவரது காா் ஓட்டுநா் ஸ்ரீதா். கடந்த ஆக 27 ஆம் தேதி நாராயணன் காரில் சென்னைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து ரூ.50 லட்சத்துடன் காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாா். வழியில் உசிலம்பட்டியிலுள்ள உறவினா் வீட்டு துக்க கழ்ச்சிக்குச் சென்றுள்ளாா். அப்போது காா் ஓட்டுநா் ஸ்ரீதரை பணத்துடன் ஊருக்கு அனுப்பியுள்ளாா். அதன்பிறகு காா் ஓட்டுநா் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தென்கரை காவல் நிலையத்தில் நாராயணன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஸ்ரீதரை தேடி வந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா் ரூ. 50 லட்சத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டாா். அதில் ரூ.15 லட்சத்தை ஒப்படைத்துள்ளாா். மேலும் ரூ. 35 லட்சம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT