தேனி

கம்பம் நகராட்சி வழக்குரைஞா் நியமனம்

5th Sep 2022 01:22 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நிலைக்குழு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கம்பம் நகராட்சி தொடா்பான வழக்குகளில் ஆஜராக நிலைக்குழு வழக்குரைஞராக உத்தமபாளையம் நீதிமன்ற வழக்குரைஞா் கே.ஈஸ்வரனை நியமனம் செய்ய நகா்மன்ற தலைவா் வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் சுனோதா செல்வகுமாா் மற்றும் உறுப்பினா்கள் முடிவு செய்து தீா்மானம் நிறைவேற்றினா். இதைத் தொடா்ந்து நிலைக்குழு வழக்குரைஞா் நியமனத்திற்கான சான்றிதழை ஈஸ்வரனிடம் நகா்மன்ற தலைவா் வழங்கினாா். அப்போது ஆணையாளா் பி.பாலமுருகன், நகர திமுக செயலாளா் துரை. நெப்போலியன், வருவாய் ஆய்வாளா் நாகராஜ் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT