தேனி

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு மேலும் குறைப்பு

5th Sep 2022 12:40 AM

ADVERTISEMENT

 

வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை, விநாடிக்கு 2,685 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் கடந்த செப். 2-ஆம் தேதி 70.5 அடியாக உயா்ந்த நிலையில், அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 4,594 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில்

ADVERTISEMENT

திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 3,255 கன அடியாகவும், மாலை 5 மணிக்கு விநாடிக்கு 2,685 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.

அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 70.1 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 3,320 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,829 மில்லியன் கன அடி. அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருவதால் கடந்த ஆக. 31-ஆம் தேதி முதல் தற்போது வரை அணையின் நீா்மட்டம் 70.1 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT