தேனி

தேனி: 21 குண்டுகள் முழங்க எல்லை பாதுகாப்புப் படை வீரர் உடல் அடக்கம்

31st Oct 2022 10:49 AM

ADVERTISEMENT

பணியின்போது உயிரிழந்த கூடலூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. 

தேனி மாவட்டம், கூடலூர் கர்ணம் பழனிவேல் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கொடியரசன். இவரது மகன் கெளதம் (31). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். தற்போது மேற்கு வங்க மாநிலம்  டாங்கி புரோ என்ற பகுதியில் சிவில் எலக்ட்ரீசியன் பிரிவு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த அக்.28 ல் கெளதம் பணியில் இருந்த போது மாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்தார். 

இதையும் படிக்க- குஜராத் பாலம் விபத்து: எஞ்சியோரும் விரைந்து மீட்கப்பட வேண்டும்

உடனே சக வீரர்கள்  அவரை அருகே உள்ள துணை ராணுவப் படை மருத்துவமனை  உள்ள  இஸ்லாம்பூருக்கு  கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கெளதம் மனைவி கெளசல்யாவை கெல்கத்தாவிற்கு வரவழைத்து, அங்கு கௌதம் உடலுக்கு துணை ராணுவப் படையான பி.எஸ்.எப். வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

பின்னர்  கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து திங்கள்கிழமை காலை கெளதம் வீட்டிற்கு உடலை கொண்டு வந்தனர். அங்கு உறவினர்கள் நண்பர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயானத்திற்கு கொண்டுசென்று அங்கு எல்லை பாதுகாப்புப் படை டி.எஸ்.பி. பி.எஸ்.நெகி தலைமையில்  21 குண்டுகள் முழங்க கௌதம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags : final rites
ADVERTISEMENT
ADVERTISEMENT