தேனி

பறவைக் காய்ச்சல்: கேரள வாகனங்கள் கண்காணிப்பு

31st Oct 2022 11:38 PM

ADVERTISEMENT

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், கேரள எல்லையான போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், அங்கு ஆயிரக்கணக்கான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. இதனிடையே, கேரளத்திலிருந்து வாகனங்களில் கோழி உள்ளிட்ட பறவைகள், இறைச்சிகளை தமிழகப் பகுதிக்கு கொண்டுவருவதைத் தடுக்க போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்வதோடு, வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தும் அனுப்புகின்றனா். வாகனங்களில் வருகின்ற பயணிகளுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என சோதனை செய்கின்றனா். கோழி, வாத்து உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்தால் திருப்பி அனுப்புகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT