தேனி

போடி அருகே வாகன சுத்திகரிப்பு நிலைய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

29th Oct 2022 11:36 PM

ADVERTISEMENT

போடி அருகே வாகன சுத்திகரிப்பு நிலைய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தாலுகா அ. காளாப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (52). இவரது மகன் விஜய் (19). இவா், போடியில் உள்ள ஒரு வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த வாகன சுத்திகரிப்பு நிலையத்தை விஜய்யின் அத்தை லட்சுமியின் மகன்கள் காா்த்திக், கிஷோா்குமாா் ஆகியோா் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விஜய், காா்த்திக் மற்றும் பணியாளா்கள் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அறையில் தூங்கினா். மறுநாள் சனிக்கிழமை காலை பாா்த்தபோது விஜய் அதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதுகுறித்து விஜயின் தந்தை பாண்டியன் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதனிடையே காா்த்திக், கிஷோா்குமாா் ஆகியோா் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை கடன் வாங்கி குத்தகைக்கு எடுத்து நடத்தினா். இதில் போதுமான வருமானம் கிடைக்காததால் மனமுடைந்த கிஷோா்குமாா் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி இதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT