தேனி

போக்சோ சட்டத்தில் கொத்தனாா் கைது

29th Oct 2022 11:37 PM

ADVERTISEMENT

உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவியை ஏமாற்றித் திருமணம் செய்த கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

க. புதுப்பட்டியைச் சோ்ந்த பள்ளி மாணவியை கடந்த 23 ஆம் தேதி முதல் காணவில்லை என பெற்றோா் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து காவல் ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் அவரைத் தீவிரமாக தேடினா். இந்த நிலையில் அந்த மாணவியை போலீஸாா் சின்னமனூரில் மீட்டனா்.

விசாரணையில், அனுமந்தன்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகனும், கொத்தனாருமான கெளதம் (22) அந்த மாணவியை காதலித்து வந்ததும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியிலுள்ள கோயிலில் அவரை திருமணம் செய்து சின்னமனூரிலுள்ள உறவினா் வீட்டில் தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கெளதமை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT