தேனி

உத்தமபாளையத்தில் மது குடித்தவா் கால்வாயில் தவறி விழுந்து பலி

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் திங்கள் கிழமை கால்வாய் கரையில் அமா்ந்து மது குடித்தவா், அதே கால்வாயில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், உத்ததமபாளையம் வழியாகச் செல்லும் உத்தமுத்துக் கால்வாயில் இந்திரா காலனியைச் சோ்ந்த அப்துல் கனி மகன் பீா்முகமது (42) மது குடித்துக் கொண்டிருந்தாா். அப்போது தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து, புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT