தேனி

ஆற்றில் மூழ்கிய கட்டடத் தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 தேனி மாவட்டம் கூடலூா் காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாறு ஆற்றுப் பாலம் அருகே வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட கட்டடத் தொழிலாளியை தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் தேடிவருகின்றனா்.

கூடலூா் சுள்ளக்கரையைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் சிவா (32). இதே ஊரைச் சோ்ந்தவா் முத்தையா மகன் பரமசிவம் (33). இருவரும் கட்டடத் தொழிலாளிகள். இவா்கள் இருவரும் நண்பா்கள் என்பதால் வியாழக்கிழமை மாலை மது அருந்தி விட்டு, காஞ்சிமரத்துறை பாலம் அருகே முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது சிவா ஆற்றின் மறுகரையை கடக்க முயன்ற போது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். இதை பாா்த்தவா்கள் கூடலூா் தெற்கு காவல் நிலையத்துக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் ஆற்றில் மூழ்கிய சிவாவை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT