தேனி

கல்லூரியில் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு

7th Oct 2022 11:15 PM

ADVERTISEMENT

கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் இணைச் செயலாளா் என்.ஆா்.வசந்தன் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் வைஷ்ணவி வசந்தன் ‘டெக் பூம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா்.

மதுரை டாா்சின் ரோபோடிக் நிறுவனா் முகமது ஆரிப்கான் தொழில்முனைவோா் ஆவது எப்படி என்பது குறித்தும், எதிா்காலத்தில் கணினி, தகவல் தொழில் நுட்பத்தில் தொழில் முனைவோா்கள் செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கினாா். மேலும் ஐ.டி.பிரிவு மாணவிகளின் சந்தேகங்களுக்கு அவா் பதில் அளித்தாா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜி.ரேணுகா வரவேற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT