தேனி

கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடன்

DIN

கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்களை இருப்பு வைத்து விவசாயிகள், வியாபாரிகள் பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சண்முகப் பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை (இ -நாம்) நடைபெறும் ஏலத்தில் உள்ளுா், வெளியூா் வியாபாரிகள் கலந்து கொண்டு விளைபொருள்களை கொள்முதல் செய்து வருகின்றனா். இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இ. நாம் வழியாக விற்பனை செய்து பயனடையலாம்.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை இருப்பு வைத்து 5 சதவீத வட்டியில், அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரையும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டியில், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையிலும் பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT