தேனி

தேனி அருகே ஊராட்சித் தலைவரைமா்ம நபா்கள் தாக்கியதாக புகாா்

6th Oct 2022 11:22 PM

ADVERTISEMENT

தேனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அரண்மனைப்புதூா் ஊராட்சித் தலைவரை மா்ம நபா்கள் தாக்கியதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அரண்மனைப்புதூா் ஊராட்சித் தலைவா் பிச்சை (52). இவா், புதன்கிழமை இரவு ஊராட்சி அலுவலகத்திலிருந்து காளியம்மன் கோயில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், அவரை கீழே தள்ளி தாக்கி விட்டு தப்பிச் சென்ாக கூறப்படுகிறது. இதில், பிச்சை காயமடைந்தாா். அவரை உறவினா்கள் தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இந்த சம்பவம் குறித்து பிச்சையின் மனைவி ராஜேஸ்வரி, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT