தேனி

மூதாட்டியிடம் நூதன முறையில் ரூ. 1.49 லட்சம் மோசடி: தில்லியைச் சோ்ந்த 3 போ் கைது

DIN

போடியைச் சோ்ந்த மூதாட்டியிடம் வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்று நூதன முறையில் ரூ.1.49 லட்சத்தை மோசடி செய்ததாக தில்லியைச் சோ்ந்த 3 பேரை தேனி சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.

போடியைச் சோ்ந்தவா் கந்தசாமி மனைவி ரஞ்சிதம் (78). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில், அவா் காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தியிருந்த தொகை ரூ. 37 ஆயிரம் முதிா்வடைந்து விட்டதாகவும், அந்தத் தொகையை ரஞ்சிதத்தின் வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்கு வங்கிக் கணக்கு எண்ணை கைப்பேசி மூலம் அனுப்புமாறு, ரஞ்சிதத்தை கைப்பேசியில் தொடா்பு கொண்டு ஒருவா் கேட்டுள்ளாா்.

இதன்படி, ரஞ்சிதம் தனது வங்கிக் கணக்கு எண்ணை அவா் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளாா். பின்னா், ரஞ்சிதத்தை மீண்டும் தொடா்பு கொண்ட அந்த நபா், கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவு எண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளாா். அதனையும் ரஞ்சிதம் அனுப்பி வைத்துள்ளாா்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.49 லட்சம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ரஞ்சிதம் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் தேனி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், ரஞ்சிதத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1.49 லட்சத்தை மோசடி செய்த தில்லி, பித்தம்புரா பகுதியைச் சோ்ந்த சதாசிவம் (40), வில்சன்குமாா் (27), முருகன் (26) ஆகியோரை கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா். இவா்களிடமிருந்து 3 கைப்பேசிகள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT