தேனி

2-ஆம் போக சாகுபடிக்கு நெல் விதைகள் கையிருப்பு

6th Oct 2022 01:40 AM

ADVERTISEMENT

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி 2 போக சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் பூங்கோதை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய முதல்போக நெல் சாகுபடி, தற்போது அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன. இந்த நிலையில், 2-ஆம் போக நெல் சாகுபடிக்குத் தேவையான கோ-51, என்.எல்.ஆா்-34449 நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பூச்சிக் கொல்லி மருந்துகள், உயிா் உரம் மற்றும் நுண்ணூட்ட உரங்களும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

நெல் விதைகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT