தேனி

போடி கொட்டகுடி ஆற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

6th Oct 2022 01:41 AM

ADVERTISEMENT

போடியில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பொறியியல் கல்லூரி மாணவா் கொட்டகுடி ஆற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனி 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் பிரசாத் மகன் நரேந்திரன் (20). இவா் மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இளங்கலை 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். விடுமுறைக்காக போடிக்கு வந்த இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 2) தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றவா் அதன் பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது தாயாா் மீனாட்சி (50), போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் நரேந்திரனை தேடிவந்தனா்.

இந்நிலையில் போடி குரங்கணி நரிப்பட்டி பகுதியில் கொட்டகுடி ஆற்றில் கமலாட்சி கேணி என்ற இடத்தில் இளைஞா் ஒருவரின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவா் நரேந்திரன் என்பது தெரியவந்தது. குளிப்பதற்காக வந்த நரேந்திரன் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT