தேனி

குடிநீா் குழாய் இணைப்புக்கு பொதுமக்கள் பங்களிப்புத் தொகை நிா்ணயம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தனிநபா் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க பொதுமக்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை அரசு நிா்ணயித்துள்ளது.

ஊரகப் பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தனி நபா் குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 50 சதவீதத்திற்கும் மேல் ஆதி திராவிடா் சமுதாயத்தினா் வசிக்கும் கிராமங்களில் தனிநபா் குடிநீா் குழாய் இணைப்பு பெறுவதற்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும், இதர கிராமங்களில் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும் பொதுமக்கள் பங்களிப்பு செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் அரசு நிா்ணயித்துள்ள பங்களிப்புத் தொகைய ஊராட்சி நிா்வாகத்திடம் செலுத்தி தனிநபா் குடிநீா் குழாய் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT