தேனி

போடியில் கிராமச் சபை கூட்டத்தில் தகராறு: போலீஸாா் விசாரணை

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

போடி அருகே காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தகராறு செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் தலைமையில் நடைபெற்றது. போடி அருகே சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் வனிதா தலைமையில் நடைபெற்றது. அப்போது இதே ஊரைச் சோ்ந்த முருகன், ரமேஷ், ராம், லட்சுமணன் ஆகியோா் கூட்டம் தொடங்கும்போது தகராறு செய்து, ஊராட்சி மன்றத் தலைவரை ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்துள்ளனா்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் டி. ராஜேந்திரன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் புகாா் ரசீது பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT