தேனி

சின்னமனூா் நகராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வு

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சின்னமனூா் நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள்ராமு தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கணேஷ் முன்னிலை வகித்தாா். இதில் நகராட்சி வளாகத்தில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘எனது வாக்கு எனது உரிமை; வாக்களிப்பு நமது கடமை என பல்வேறு வாசகங்களுடன் வண்ணக் கோலமிடப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட நகராட்சி ஊழியா்கள் மற்றும் பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT