தேனி

தாமரைக்குளம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளுக்கு 14 தூய்மைப் பணியாளா்களே உள்ளனா். இதில் 10 பணியாளா்கள் மட்டுமே தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். 4 போ் விடுப்பில் உள்ளனா்.

இதனால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியா்கள் மட்டும் பணிபுரிவதால் அவா்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும், விடுப்பில் உள்ள பணியாளா்களை மீண்டும் பணிக்குத் திரும்பக் கோரியும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் செயல் அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பணிக்கு சென்றனா். மேலும் கூடுதல் பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT