தேனி

காமயகவுண்டன்பட்டியில் முதல்போக அறுவடை தொடக்கம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் முதல்போக அறுவடை தொடங்கியது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சின்னவாய்க்கால்

பகுதிகளில் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் இயந்திரம் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து விவசாயி முருகன் கூறியது: நெல் கதிா் அறுவடைப் பணியில் முன்பு தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்படுவா். தற்போது அவா்கள் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள், ஏலக்காய் தோட்டங்களுக்கு பணிக்குச் செல்வதால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. இதனால் இயந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT