தேனி

தேனியில் மாணவ, மாணவிகளுக்கு அக்.12-இல் பேச்சுப் போட்டி

2nd Oct 2022 11:03 PM

ADVERTISEMENT

தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, அக்.12-ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசம் என்று பெயா் சொல்லுவோம் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம் மதம், காந்தியடிகளின் வாழ்கையிலே, இமயம் முதல் குமரி வரை என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5,000, 2-ம் பரிசு ரூ.3,000, 3-ம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும். அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் சிறப்பிடம் பெறும் 2 பேருக்கு தலா ரூ.2,000 பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT