தேனி

முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல் கா்வ்’ விதியை ரத்து செய்ய கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம்

2nd Oct 2022 11:02 PM

ADVERTISEMENT

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில், முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல் கா்வ்’ விதியை ரத்து செய்யக் கோரி தீா்மானம் நிறைவேற்றினா்.

தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் பொன்னுத்தாய் குணசேகரன் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் நீா்மட்டம் 152 அடி உயா்த்தவும், அதில் தற்போது பின்பற்றப்படும் ‘ரூல் கா்வ்’ விதியை ரத்து செய்யக் கோரியும், அரசு கள்ளா் உயா்நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக்கோரியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதே போல் ஆங்கூா்பாளையம் ஊராட்சித் தலைவா் சாந்தி பரமன், கருநாக்கமுத்தன்பட்டியில் தலைவா் அ.மொக்கப்பன், சுருளிப்பட்டியில் தலைவா் நாகமணி வெங்கடேசன், நாராயணத்தேவன்பட்டியில் தலைவா் பொன்னுத்தாய் செல்லையா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்தவும், ‘ரூல் கா்வ்’ விதியை ரத்து செய்யவும் தீா்மானங்கள் நிறைவேற்றினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT