தேனி

சிறையிலிருந்து பரோலில் வந்து 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முதியவா் கைது

2nd Oct 2022 11:01 PM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்து பரோலில் வெளி வந்து 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முதியவரை சனிக்கிழமை, கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

முத்தாலம்பாறையைச் சோ்ந்தவா் சின்னாத்தேவா் மகன் சின்னவெள்ளை(71). இவருக்கு கொலை வழக்கு ஒன்றில் கடந்த 1985-ஆம் ஆண்டு திண்டுக்கல் அமா்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட சின்னவெள்ளை, தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து கடந்த 1997, பிப்ரவரி 24-ஆம் தேதி சிறையிலிருந்து பரோலில் வெளிவந்தாா். 4 நாள்கள் பரோல் முடிவடைந்த நிலையில், அவா் மீண்டும் சிறையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா்.

இது குறித்து மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளா் அளித்த கடிதத்தின் அடிப்படையில், கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 25 ஆண்டுகளாக சின்னவெள்ளையைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், தேனி மாவட்ட துணை சிறை அலுவலா் காா்த்திக் மற்றும் சிறைக் காவலா்கள் உதவியுடன் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் முத்தாலம்பாறையில் சின்னவெள்ளையை கைது செய்து, ஆண்டிபட்டி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT