தேனி

போடி நகா் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிதி ஒதுக்கக் கோரிக்கை

DIN

போடி நகா் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போடியில் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவா் ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் (பொறுப்பு) இ.செல்வராணி, மேலாளா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ராஜசேகா் (திமுக): வஞ்சி ஓடையில் விடுபட்டுள்ள இடங்களிலும் வேலி அமைக்க வேண்டும். நகா்மன்றக் கூட்டத்தில் வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை.

பாலசுப்பிரமணி (அதிமுக): பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு இருவழிப் பாதை அமைக்க வேண்டும்.

மகேஸ்குமாா் (திமுக): போடி நகராட்சிக்கு புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு உள்ளூரைச் சோ்ந்தவா்களையே ஓட்டுநா்களாக நியமிக்க வேண்டும்.

பெருமாள்: நகராட்சிக் குப்பை கிடங்கில் குப்பைகளை பிரித்து உரமாக்கப்படுகிா?

ஆணையா்: குப்பைகளை பிரித்து உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிரபாகரன் (திமுக): நகராட்சியில் பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு, வழிப்பறி அதிகரித்துள்ளது. கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். 33 வாா்டுகளிலும் சிறு பாலங்கள் அமைக்கும் பணி ஒரே ஒப்பந்ததாரரிடம் வழங்க உள்ளது. இதனால் பணி தாமதம் ஆகும்.

மணிகண்டன் (பாஜக): சமூக விரோத செயல்கள் நடைபெறும் பேருந்து நிலைய ஓய்வறையை இடித்துவிட்டு பாதையாக மாற்ற வேண்டும். பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ராஜா (திமுக): போடி இந்திரா காந்தி சிலை பின்புறத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் தனியாக அமைத்து கட்டணம் வசூலித்தால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். போடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தலைவா் மற்றும் உறுப்பினா்களை யாரும் மதிப்பதில்லை.

ராஜராஜேஸ்வரி (தலைவா்): உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். லஞ்சம் வாங்குவது குறித்த ஆதாரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT