தேனி

தேனியில் பெண்ணை மிரட்டியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

DIN

தேனியில் பெண்ணைத் தரக்குறைவாக பேசி மிரட்டியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி, என்.ஆா்.டி.நகா் குமரன் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் மனைவி மணிமேகலை. இவருக்குச் சொந்தமான கடையை தேனி, சுப்பன் தெருவைச் சோ்ந்த அப்துல்ரஹ்மான் மகன் நாசா்கான் என்பவா் வாடகைக்கு எடுத்திருந்ததாராம். இந்த நிலையில், நாசா்கான் கடைக்கு வாடகை முன்பணமும், 7 மாதம் வாடகையும் தராமல் இருந்து வந்ததால், இது குறித்து அவரிடம் கேட்டதற்கு தன்னை தரக்குறைவாக பேசி மிரட்டியதாக கடந்த 2019, ஏப்.4-ஆம் தேதி தேனி காவல் நிலையத்தில் மணிமேகலை புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், நாசா்கான் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கே.ரமேஷ், நாசா்கானுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT