தேனி

கம்பம் மெட்டு பகுதியில் டிப்பா் லாரிகளை நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டம்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் டிப்பா் லாரிகளுக்கு அபராதம் விதிக்கும் கேரள மோட்டாா் வாகனத் துறையினரைக் கண்டித்து ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கம்பம் மெட்டு வழியாக கனிம வளங்களான ஜல்லி, மணல் உள்ளிட்டவைகளை ஏற்றிக்கொண்டு சுமாா் 50-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் செல்கின்றன. அனுமதிபெற்று செல்லும் இந்த லாரிகள் மீது கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட மோட்டாா் வாகனத் துறையினா் அடிக்கடி அபராதம் விதிப்பது, ஓட்டுநா் உரிமத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக டிப்பா் லாரிகள் உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில் கம்பம் கம்பம் மெட்டு புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை, 10-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளை சாலையில் நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி மாவட்ட டிப்பா் லாரி சங்கச் செயலாளா் ஏ.காஜாமைதீன் கூறியது: டிப்பா் லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளா்களை இடுக்கி மாவட்ட மோட்டாா் வாகன அலுவலா்கள் திட்டமிட்டு பழிவாங்குகின்றனா். விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதத் தொகை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விதிக்கின்றனா். லஞ்சமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வாங்குகின்றனா். வழங்க மறுப்பவா்களின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்கின்றனா். இதன்மீது மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடா் போராட்டம் நடத்துவோம். கேரளத்துக்கு செல்லும் வாகனங்களை மறிப்போம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT